பெண்களுடைய பாதுகாப்புதான் எங்கள் அரசின் முதன்மையான முன்னுரிமை: பிரதமர் மோடி
- பெண் பிள்ளைகள் வீட்டிற்கு காலதாமதாக வரும்போது, பெற்றோர்கள் அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள்.
- ஆனால், ஆண் பிள்ளைகள் வீட்டிற்கு வரும்போது, பெற்றோர்கள் அதேபோன்று செய்வதில்லை.
சர்வதேச மகளிர் தினமான இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தின் வான்சி போர்சி கிராமத்தில் மிகப்பெரிய அளவில் கூடியிருந்த மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
பாஜக தலைமையிலான எங்கள் அரசு பெண்களுகளுடைய பாதுகாப்பிற்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
காலனித்துவ கால குற்றவியல் சட்டத்திற்கு (இந்திய தண்டனைச் சட்டம்- Indian Penal Code) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, இது பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக வழங்கப்படும் சட்ட நடைமுறைகளை வலுப்படுத்துகுிறத. எளிதான புகார் அளிக்கலாம். விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.
பெண் பிள்ளைகள் வீட்டிற்கு காலதாமதாக வரும்போது, பெற்றோர்கள் அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், ஆண் பிள்ளைகள் வீட்டிற்கு வரும்போது, பெற்றோர்கள் அதேபோன்று செய்வதில்லை. அவர்கள் ஆண்களிடமும் கேள்வி கேட்க வேண்டும்.
நான் உலகின் மிகப்பெரிய செல்வந்தன். என்னுடைய கூற்று கேட்பவர்களில் சிலருக்கு ஒருவித கேள்வியை ஏற்படுத்தலாம். ஆனால் நான் மீண்டும் கூறுவேன் நான் உலகின் மிகப்பெரிய செல்வந்தன் என்று. பணத்தின் அடிப்படையில் அல்ல. மாறாக கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசீர்வாதங்களால். இந்த ஆசீர்வாதங்கள்தான் எனது மிகப்பெரிய பலம், மூலதனம் மற்றும் பாதுகாப்பு கேடயம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.