இந்தியா

ஜனாதிபதி தேர்தலிலும் பணம் விளையாடுகிறது: யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு

Published On 2022-07-15 02:33 GMT   |   Update On 2022-07-15 02:33 GMT
  • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
  • பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

போபால் :

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள யஷ்வந்த் சின்கா நேற்று மத்திய பிரதேசம் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜனதா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறுகையில், 'ஜனாதிபதி தேர்தலில் கூட பா.ஜனதா கட்சி, 'ஆபரேஷன் கமலம்' திட்டத்தை அரங்கேற்றுகிறது.

அதன்படி தங்கள் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய பா.ஜனதா அல்லாத உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்து வருகிறது. இது குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. ஏனெனில் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் முடிவை கண்டு பா.ஜனதா அஞ்சுகிறது' என குற்றம் சாட்டினார்.

ஆளும் பா.ஜனதாவின் இத்தகைய மோசடி குறித்து, ஜனாதிபதி தேர்தலை நடத்தும் மாநிலங்களவை செயலரும், தேர்தல் கமிஷனும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் யஷ்வந்த் சின்கா கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News