இந்தியா

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்- இடைக்கால தடை விதித்து உத்தரவு

Published On 2024-06-14 12:25 GMT   |   Update On 2024-06-14 12:25 GMT
  • பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பிப்பு.
  • ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.

சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிடிவாரண்டுக்கு எதிராக எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News