மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் வழிகாட்டியாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள்- வயநாடு மக்களுக்கு பிரியங்கா கடிதம்
- போராளிக்கான பயணமாக இருக்காது.
- அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள பிரச்சனைகளுக்காக போராடுவது எனது வாழ்வின் மையமாக இருக்கும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கேரள மாநிலம் வயநாடு எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதில் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால் அங்கு நவம்பர் 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
பிரியங்கா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். வயநாடு தொகுதியில் பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் சத்யன் மோகெரியும் போட்டியிடு கின்றனர்.
இந்த நிலையில் வயநாடு மக்களுக்கு பிரியங்கா கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உங்கள் மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள். மக்கள் பிரதிநிதியாக எனது முதல் பயணமாக இருக்கும். ஆனால் போராளிக்கான பயணமாக இருக்காது.
ஜனநாயகம், நீதி, அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள பிரச்சனைகளுக்காக போராடுவது எனது வாழ்வின் மையமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.