இந்தியா

ரீல்ஸ் மோகத்தால் ஜீப்-உடன் கடலில் சிக்கிய வாலிபர்கள்: வழக்குப்பதிவு செய்த போலீஸ் - வீடியோ

Published On 2024-06-25 03:30 GMT   |   Update On 2024-06-25 04:57 GMT
  • கடல்நீர் உள்ளே சென்றதால் ஜீப்-ன் எஞ்சின் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்களும், இளம்பெண்களும் பல்வேறு விதமான ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது போன்ற வீடியோக்களை எடுக்கும் போது உயிரை பணயம் வைத்து எடுக்கும் சாகச காட்சிகள் பயனர்களை வியப்பில் ஆழ்த்தினாலும், பல சமயங்களில் அவை விபரீதத்தில் முடிந்து விடுகிறது.

இந்நிலையில், ரீல்ஸ் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள மகிந்திரா ஜீப் கார்களை கடலுக்குள் எடுத்துச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள கடற்கரையில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கார்கள் இரண்டும் கடல்நீரில் சிக்கின. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவழியாக கார்கள் மீட்கப்பட்டன. ஆனால், கடல்நீர் உள்ளே சென்றதால் ஜீப்-ன் எஞ்சின் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News