ஓட்டல் அறையில் யுடியூபர் காதலி கொலை.. 2 நாளாக சடலத்தின் முன் அமர்ந்து சிகரெட் புகைத்த காதலன்
- அறைக்குள் சென்றவர்கள் இரண்டு நாட்களாக வெளியே வராமல் இருந்தனர்
- அறையில் இருந்த சமயத்தில் நைலான் கயிறு ஒன்றையும் செப்ட்டோவில் ஆர்டர் செய்துள்ளார் ஆரவ்.
பெங்களூரில் யூடியூபெர் காதலியை ஹோட்டல் ரூமில் வைத்து கொலை செய்து நாள் முழுவதும் காதலன் உடலுடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த மாயா கோகாய் என்ற 19 வயது இளம்பெண் தனது கடந்த 23-ந்தேதி [சனிக்கிழமை] கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலன் ஆரவ் ஹர்னி என்பவருடன் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.
மதியம் 12.30 மணியளவில் அறைக்குள் சென்றவர்கள் இரண்டு நாட்களாக வெளியே வராமல் இருந்த நேற்று [செவ்வாய்க்கிழமை] காலை 8.30 மணியளவில் காதலன் ஆரவ் ஹர்னி மட்டும் வெளியே வந்துள்ளார். அவர் அங்கிருந்து சென்ற பின்னர் அறைக்குள் இருந்த துர்நாற்றம் வந்ததால் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்ற பார்த்தபோது மாயா கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.
போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் மாயாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாயா கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கொலை செய்த பின்னர் 2 நாட்களாக அறைக்குள்ளேயே மாயா உடலுடன் இருந்த ஆரவ் நேற்று [செவ்வாய்க்கிழமை] அங்கிருந்து வெளியேறியுள்ளார் .
உடலுடன் இரண்டு நாட்களாக இருந்த அவர் பெரும்பாலான நேரம் சடலத்தின் முன் அமர்ந்து சிகரெட் புகைத்தபடி கழித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.மாயாவின்உடலில் தலை உட்பட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. அவரது மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலயில் இருந்துள்ளார்.
கொலையை செய்துவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி வேறு இடத்தில் போடுவதற்கு ஆரவ் திட்டமிட்டிருந்தாரா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அறையில் இருந்த சமயத்தில் நைலான் கயிறு ஒன்றையும் செப்ட்டோவில் ஆர்டர் செய்துள்ளார் ஆரவ். அரையில் இருந்த பொருட்களை வைத்து இவர்களது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாயா கோகாய் யூடியூபில் vlogging வலோக்கிங் செய்பவர் என்று தெரியவந்துள்ளது.
கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதை இது உறுதிப்படுத்துகிறது. நவம்பர் 23 முதல் 26 வரை அறைக்குள் வேறு யாரும் நுழைந்ததாக சிசிடிவி காட்சிகள் காட்டவில்லை. எனவே ஆரவ் தான் கொலையாளி என்பது உறுதியாகியுள்ள நிலையில் போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
.