இந்தியா

ஆந்திர காங்கிரஸ் தலைவரானார் ஒய்எஸ் ஷர்மிளா

Published On 2024-01-16 09:43 GMT   |   Update On 2024-01-16 09:43 GMT
  • ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி என புதிய கட்சியை தொடங்கினார் ஷர்மிளா
  • திங்கள் அன்று கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்தார்

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய் எஸ் ஷர்மிளா (YS Sharmila), தனது சகோதரருடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டால் 2021 ஜூலை மாதம் அவரது கட்சியில் இருந்து விலகினார்.

தொடர்ந்து, ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (YSR Telangana Party) எனும் புதிய கட்சியை தொடங்கினார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளா இணைந்தார். தனது கட்சியையும் காங்கிரசுடன் இணைத்தார்.

கடந்த திங்கட்கிழமையன்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு (Gidugu Rudra Raju) தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை, ராஜு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், இன்று ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒய்எஸ் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஆந்திர அரசியலில் சகோதரன்-சகோதரி போட்டி உருவாக வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் ஆந்திராவில், காங்கிரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News