null
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்-தெலுங்குதேசம் கட்சியினர் மோதல்.. வேட்பாளர் மீது தாக்குதல்
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே கடுமயான மோதல் வெடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவும், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (மே 13) நடந்தது. வாக்குபதிவின்போது ஒரு சில இடங்களில் பிரதான கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகும் இன்று (மே 15) மதியம் திருப்பதி மாவட்டத்தில், சந்திரகிரி தோகுதி தெலுங்கு தேச கூட்டணி வேட்பாளர் புலிவர்த்தி நாணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கு பத்மாவதி பலக்லைக்கழகத்தில் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்டு திரும்பும்போது நாணி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் நாணி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தெலுங்குதேசம் கட்சியினர் கூறுகையில், சுமார் 150 பேர் கத்தி, மற்றும் தடிகளுடன் வந்து தங்களை சரமாரியாக தாக்கியதாக தெரிவித்துள்ளனர். தோல்வி பயத்தில் ஓஎஸ் ஆர் கட்சியினர் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அவர்கள் விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஓஎஸ்ஆர் கொடிகளுடன் காணப்பட்ட வாகனங்களை தெலுங்கு தேசம் கட்சியினர் அடித்து உடைத்தனர். இதனால் பத்மாவதி பல்கலைக்கழக வளாகத்திலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.