இந்தியா (National)

ஒருநாள் டெலிவரி ஏஜண்ட் ஆன ஜொமாட்டோ சி.இ.ஓ.!

Published On 2024-10-06 07:15 GMT   |   Update On 2024-10-06 07:15 GMT
  • ஜொமாட்டோவில் உணவு டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டார்.
  • ஜொமாட்டோ சி.இ.ஓ. பதிவுக்கு பலர் லைக்குகளை வழங்கினர்.

இந்தியாவில் பிரபல ஆன்லைன் உணவு விற்பனை தளமாக ஜொமாட்டோ விளங்குகிறது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான தீபிந்திர் கோயல் தனது வழக்கமான பணிகளை விட்டுவிட்டு, ஜொமாட்டோவில் உணவு டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டார்.

இதற்காக ஜொமாட்டோ சீருடையில் தயாரான தீபிந்தர் உடன் அவரது மனைவி ஜியா கோயல் இணைந்து உணவு டெலிவரி செய்த கணவருக்கு உதவியாக செயல்பட்டார். இதுகுறித்த பதிவிட்ட கோயல், "சில நாட்களுக்கு முன் ஜியா கோயல் உடன் இணைந்து உணவு டெலிவரி கொடுக்க சென்றிருந்தேன்," என குறிப்பிட்டு, உடன் உணவு டெலிவரியின் போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்து இருந்தார்.

 


இவரது இந்த பதிவுக்கு பலர் லைக்குகளை வழங்க, சிலர் டெலிவரி பணியை எங்கள் பகுதியில் செய்யுங்கள் என்றவாரு கமென்ட் செய்தனர். பலர் இவரது செயல் பாராட்டுக்குரியது என்றும், சிலர் இவர் விளம்பரத்திற்காக இப்படி செய்கிறார் என்றும் கமென்ட் செய்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜொமாட்டோ சி.இ.ஓ. தீபிந்தர் கோயல், ஷார்க் டேன்க் இந்தியாவை போட்டி நிறுவனமான ஸ்விக்கி ஸ்பான்சர் செய்வதாகவும், அந்நிறுவனம் தன்னை புதிய சீசனில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக கூறினார்.

ஸ்விக்கி நிறுவனம் ஷார்க் டேன்க் இந்தியா புதிய சீசனை ஸ்பான்சர் செய்ய ரூ. 25 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்வதில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News