இந்தியா

ஆட்சி அமைக்க உரிமை கோரிய சோரம் மக்கள் இயக்கம்: கவர்னருடன் லால்டுஹோமா சந்திப்பு

Published On 2023-12-06 06:14 GMT   |   Update On 2023-12-06 07:00 GMT
  • மிசோரத்தில் சோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்றது.
  • சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா கவர்னர் ஹரிபாபுவைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

அய்ஸ்வால்:

மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த திங்கட்கிழமை எண்ணப்பட்டது. இதில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.

இதையடுத்து, மிசோரமின் புதிய முதல் மந்திரியாக சோரம் மக்கள் இயக்கம் கட்சி தலைவர் லால்டுஹோமா பதவியேற்பார் என தகவல் வெளியானது. ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளையும், பா.ஜ.க. 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது.

இந்நிலையில், சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா தனது ஆதரவாளர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் ஹரிபாபுவைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

இதுதொடர்பாக, லால்டுஹோமா கூறுகையில், புதிய அரசு அமைப்பது குறித்து பேசினோம். அவர் என்னை முதல் மந்திரியாக நியமித்து, ஆட்சி அமைக்கச் சொன்னார். அது வெள்ளிக்கிழமை நடைபெறும். அடுத்த வாரம் முதல் அமர்வை நடத்துவோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News