இந்தியா
மிசோரம் முதல்வராக பதவியேற்றார் லால்டுஹோமா
- மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
- சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வர் ஆனார்.
மிசோரம் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 7-ம் தேதி ஒரேகட்டமாக நடந்தது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த திங்கட்கிழமை எண்ணப்பட்டது. இதில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து, மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளையும், பா.ஜ.க. 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்றதை அடுத்து சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மிசோரம் மாநிலத்தின் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சோரம்தங்காவும் கலந்து கொண்டிருந்தார்.