ஆரோவில்லில் 20 நாட்டு தூதர்கள் தியானம்
- 20 நாடுகளின் ஆணையர்கள், தூதர்கள், முதன்மை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.
- ஆரோவில் அறக்கட்டளை துணைச் செயலாளர் சொர்ணாம்பிகா, ஏரி பயன்பாட்டை முழுவதும் விளக்கினார்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் மாத்ரி மந்திர் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்களை வெளிநாடுகளில் இருந்து வந்த குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த குழுவில் உலக வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிறுவன தலைவர் ராஜிவ்குப்தா, ரிலிகேர் செயல் தலைவர் ரஷ்மி சாலியா, மொரிஷியஸ் குடியரசின் உயர்மட்ட ஆணையர் ஹைமன்டாயல் டில்லம், பெலாரஸ் தூதரகம் அலெக்சாண்டர் மோஷ்சோவிடிஸ், மங்கோலியா உயர் மட்ட ஆணையர் கன்போல்டு டாம்பாஜாவ், நமீபியா உயர் மட்ட ஆணையர் காப்ரியேல் சினிம்போ, வடமாசிடோனியா உயர்மட்ட ஆணையர் மக்மூத் அப்துலா அல்கானி, லெசோதோ உயர்மட்ட ஆணையர் மரோசா பெடெலோ மாகோபனே, கமரோஸ் தூதரகம் அசின் மசா மசூத், பிஜி உயர்மட்ட ஆணையம் சீமா பால்டர் சிங் உட்பட 20 நாடுகளின் ஆணையர்கள், தூதர்கள், முதன்மை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.
பின்னர் குழுவினர் மாத்ரி மந்திரில் தியானத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அன்னையின் கனவு திட்டமான மாத்ரி மந்திர் ஏரியை பார்வையிட்டனர். 30 அடி ஆழம், 100 அடி நீளமுள்ள ஏரி சுற்றியுள்ள கிராமங்களில் நீர் மட்டத்தை மேம்படுத்துகிறது என ஆரோவில் அறக்கட்டளை துணைச் செயலாளர் சொர்ணாம்பிகா, ஏரி பயன்பாட்டை முழுவதும் விளக்கினார்.