புதுச்சேரி

புதுச்சேரியில் கோடைகாலம் போல் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2024-09-15 04:58 GMT   |   Update On 2024-09-15 04:58 GMT
  • கடந்த சில நாட்களாக கோடை காலம்போல புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
  • நேற்று முன்தினம் வெப்பம் 100 டிகிரியை நெருங்கியது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

பின்னர் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைந்து இயல்புநிலைக்கு திரும்புவதுதான் வழக்கம். ஜூன் மாதம் முதல் விட்டு விட்டு மழை பெய்யும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியாது.

ஆனால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஜூலை மாதம் வரை புதுவையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

கடந்த மாதம் ஒரு சில நாட்கள் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆவலுடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை காலம்போல புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் வெப்பம் 100 டிகிரியை நெருங்கியது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சுட்டெரிக்கும் வகையில் வெயில் அடித்தது. இருந்தபோதிலும் வெயிலின் அளவு 98.24 டிகிரி என்றே பதிவாகியிருந்தது.

Tags:    

Similar News