விளையாட்டு
பாராஒலிம்பிக் போட்டிக்கு 20 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
- பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
- இந்த ஒலிம்பிக் திருவிழாவில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாரீஸ்:
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. வருகிற 8-ந்தேதி வரை நடைபெறும் இந்த ஒலிம்பிக் திருவிழாவில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று முதல் போட்டிகள் நடக்க உள்ளன.
போட்டியை பார்க்க இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பதாகவும், கடைசி நாள் வரை டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.