செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியில் முஸ்லீம் வீரர்கள் ஏன் இடம்பெறவில்லை? ஹர்பஜன் சிங் பதில்

Published On 2017-10-24 12:43 GMT   |   Update On 2017-10-24 12:44 GMT
தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் முஸ்லீம் வீரர்கள் ஏன் இடம்பெறவில்லை? என்ற முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் கேள்விக்கு ஹர்பஜன் சிங் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியில் முஸ்லீம் வீரர்கள் ஏன் இடம்பெற வில்லை? என முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் கேள்வி எழுப்பியிருந்தார். அவர் செய்த டுவிட்டில், 'தற்போதைய இந்திய அணியில் முஸ்லீம் வீரர்கள் யாராவது இருக்கிறார்களா? இந்தியாவில் முஸ்லீம் வீரர்கள் விளையாடுவதை நிறுத்தி விட்டனரா?' என கூறினார்.



அவரது கேள்விக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்துள்ளார். 'இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் அனைவரும் இந்தியர்களே. எங்களில் ஜாதி, மதம் என்ற பாகுபாடு கிடையாது. விளையாட்டிற்குள் இந்து, முஸ்லீம் என்ற வேறுபாட்டை ஏற்படுத்த கூடாது' என ஹர்பஜன் டுவிட் செய்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான டி20 போட்டி மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் முகமத் சிராஜ் இடம்பெற்றுள்ளார். அதே போல், டெஸ்ட் போட்டியில் முகமத் ஷமி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News