செய்திகள்
அர்செனல் அணியில் புதிய பயிற்சியாளராக எனை எமெரி நியமனம்
அர்சென் வெங்கர் பதவியில் இருந்து விலகியதால் அர்செனல் அணியின் புதிய பயிற்சியாளராக எனை எமெரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கி்ல் விளையாடும் முன்னணி கால்பந்து அணிகள் ஒன்று அர்செனல். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக அர்சென் வெங்கர் இருந்து வந்தார். இவரது தலைமையில் அர்செனல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் 2017-18 சீசனோடு ஓய்வு பெற்றார். சுமார் 22 வருட காலமாக அர்சென் வெங்கர் அர்செனல் அணியில் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.
இந்நிலையில் பாரி்ஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து உனை எமெரி அர்செனல் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த 46 வயதான எமெரி 2013 முதல் 2016 வரை செவியா அணிக்காகவும், 2016 முதல் 2018 வரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காகவும் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.