இந்தியா

தேசம் முதலில் என்ற உணர்வே இந்தியாவின் வளர்ச்சிக்கு அவசியம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

Published On 2024-11-22 18:10 GMT   |   Update On 2024-11-22 18:10 GMT
  • நமது ஒற்றுமையை குலைக்கும் வகையில் வேறுபாடுகளை உருவாக்கினர்.
  • இதனால் நம் மக்களிடையே அடிமை மனநிலை ஏற்பட்டது.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் லோக்மந்தன்-2024 தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

நாம் அனைவரும் இந்தியர்கள். இந்த தேசிய ஒற்றுமை உணர்வு அனைத்து சவால்களையும் மீறி நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கிறது.

நமது சமூகத்தைப் பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் பல நூற்றாண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல நூற்றாண்டுகளாக ஏகாதிபத்தியமும், காலனித்துவ சக்திகளும் இந்தியாவைப் பொருளாதார ரீதியாக சுரண்டியதுடன், நமது சமூக கட்டமைப்பையும் அழிக்க முயன்றன.

நமது வளமான அறிவார்ந்த பாரம்பரியத்தை இழிவாகப் பார்த்த ஆட்சியாளர்கள் மக்களிடையே கலாசாரத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர்.

நமது ஒற்றுமையை குலைக்கும் வகையில் வேறுபாடுகளை உருவாக்கினர். இதனால் நம் மக்களிடையே அடிமை மனநிலை ஏற்பட்டது.

நாம் நமது விலைமதிப்பற்ற மரபுகளை மீண்டும் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மக்களிடையே 'தேசம் முதலில்' என்ற உணர்வை ஏற்படுத்துவது அவசியம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News