செய்திகள்
மலேசியா ஓபன் பேட்மிண்டன்- 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பிவி சிந்து
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். #PVSindhu
மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து முதல் சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த அயா ஒஹோரியை எதிர்கொண்டார். இதில் 26-24, 21-15 என நேர்செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிரனீத் 12-21, 7-21 என சீன தைபே வீரரிடம் தோல்வியடைந்தார். 2-வது சுற்றில் பிவி சிந்து மலேசிய வீராங்கனை யிங் யிங் லீ அல்லது சீன தைபே வீராங்கனை சியாக யிங் லியை எதிர்கொள்கிறார்.