செய்திகள்

படுதோல்வி எதிரொலி- ஸ்பெயின் வீரர் இனியஸ்டா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

Published On 2018-07-02 08:05 GMT   |   Update On 2018-07-02 08:28 GMT
ரஷியாவிடம் தோல்வியடைந்ததால், சர்வதேச போட்டியில் இருந்து ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஓய்வு பெற்றுள்ளார். #WorldCup2018 #Iniesta
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் - ரஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்திலும், அதன்பின் வழங்கிய 30 நிமிட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரஷியா 4-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

அனுபவ வீரர்களை கொண்ட ஸ்பெயின் அணி உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இருந்தே தடுமாறியது. அந்த அணியின் முன்னணி வீரர்களின் மீது எழுந்த கடும் விமர்சனைத்தை தொடர்ந்து 34 வயதான இனியஸ்டா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.



இவர் ஸ்பெயின் அணிக்காக 131 போட்டிகளில் விளையாடி 13 கோல்கள் அடித்துள்ளார். 2002-ல் இருந்து இந்த சீசன் வரை பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த இனியஸ்டா, 442 போட்டிகளில் 35 கோல்கள் அடித்துள்ளார். இவர் தலைசிறந்த மிட்பீல்டர் ஆவார்.
Tags:    

Similar News