செய்திகள்

ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி- தொடரை 2-0 எனக் கைப்பற்றியது

Published On 2018-10-14 12:03 GMT   |   Update On 2018-10-14 12:06 GMT
ஐதராபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்களும், இந்தியா 367 ரன்களும் சேர்த்தது.

56 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ் (4), ஜடேஜா (3) ஆகியோரின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 127 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவை விட 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் இந்தியாவிற்கு 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ். 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.



இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அடைந்த லோகேஷ் ராகுல் பொறுப்புடன் விளையாடினார். இருவரும் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தனர்.

17-வது ஓவரின் முதல் பந்தை பிரித்வி ஷா பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 75 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா தலா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Tags:    

Similar News