செய்திகள்

சூதாட்ட குற்றச்சாட்டு- இலங்கை பந்துவீச்சு பயிற்சியாளர் சஸ்பெண்டு

Published On 2018-11-01 06:29 GMT   |   Update On 2018-11-01 06:29 GMT
சூதாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் நுவான் ஜோய்சாவை சஸ்பெண்டு செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. #ICC ##NuwanZoysa
துபாய்:

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் நுவான் ஜோய்சா. முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சூதாட்ட குற்றச்சாட்டை பதிவு செய்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்டு செய்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

நுவான் ஜோய்சா மீது மேட்ச் பிக்சிங் மற்றும் அணியின் தகவல்களை பலருக்கு பரிமாறியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் ஊழலில் சிக்கி திணறி வருகிறது. ஏற்கனவே முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு தலைவருமான ஜெய சூரியா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் சூதாட்டம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.

இதே போல் காலே மைதான ஆடுகள பராமரிப்பாளர் ஜெயநந்தா வர்ண வீராவுக்கு ஊழல் தடுப்பு விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் 3 ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும் ஊழல் குற்றச்சாட்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #ICC #NuwanZoysa
Tags:    

Similar News