விசேஷ அக்சசரீஸ் எதுவும் இல்லை.. கூலாக வந்து சில்வர் தட்டி சென்ற 51 வயது வீரர் - வீடியோ வைரல்
- துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் சிறப்பு கண்ணாடிகளை அணிவார்கள்.
- துப்பாக்கி சுடுதலில் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வெள்ளி பதக்கம் வென்றனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியது.
இந்த போட்டியில் வெள்ளி பதக்கத்தை துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.
51 வயதான யூசுப், துல்லியமான பார்க்கக்கூடிய கண் கண்ணாடி மற்றும் சத்தம் கேட்காமல் இருக்க கூடிய கருவிகள் எதுவும் அணியாமல் போட்டியில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சாதாரணமான கண்ணாடியை அணிந்து கொண்டு ஒரு கையை பாக்கெட்டில் வைத்து கொண்டு பல வீரர்களை தோற்கடித்து வெள்ளி பதக்கத்தை அவர் வென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பில் இருந்து தற்போது வரை 5 ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த வெள்ளி பதக்கம் தான் இவர் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.
துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கண்கள் கூசாமல் இருப்பதற்கும் ஒரு கண்ணின் பார்வையை தடுக்கும் விதமாகவும் துல்லியமான சிறப்பு கண்ணாடிகளை அணிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.