விளையாட்டு

மீண்டும் இந்தியாவுக்கு வாருங்கள் கேரி.. ஹர்பஜன் சிங் கோரிக்கை

Published On 2024-06-18 14:14 GMT   |   Update On 2024-06-18 14:14 GMT
  • பாகிஸ்தானில் உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி.
  • இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாருங்கள்.

மும்பை:

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியும் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமை இல்லையென கேரி கிர்ஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அனைத்து வீரர்களும் பிரிந்து கிடப்பதாக தெரிவித்த அவர் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிர்ஸ்டனுக்கு இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

அங்கே (பாகிஸ்தான்) உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி. இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாருங்கள். கேரி கிர்ஸ்டன் ஒரு அரிதான வைரம். ஒரு சிறந்த பயிற்சியாளர், வழிகாட்டி, நேர்மையான மற்றும் எங்கள் 2011 அணியில் உள்ள அனைவருக்கும் மிகவும் அன்பான நண்பர். 2011 உலகக் கோப்பையை வென்ற எங்கள் பயிற்சியாளர். சிறப்பு மனிதர் கேரி.

இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டன். இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News