9 விக்கெட்டுகளை வீழ்த்தி அர்ஜூன் டெண்டுல்கர் அசத்தல்
- கோவா மற்றும் கர்நாடகா அணிகள் மோதின.
- இதில் கோவா அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாக்டர் கே திம்மப்பையா நினைவு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதில் கர்நாடகா மற்றும் கோவா அணிகள் மோதின.
இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 26.3 ஓவர்களில் 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்சில், கர்நாடகா 36.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் டெண்டுல்கர் 13 ஓவர்களில் 5/41 எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கோவா அணியில் அபினவ் தேஜ்ரானா (109) சதம் அடிக்க கோவா 413 ரன்களை குவித்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய கர்நாடகா அணி 30.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் கோவா அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் அர்ஜுன் 13.3 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அர்ஜூன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அர்ஜுன், இதுவரை சீனியர் மூன்று வடிவங்களில் 49 போட்டி ஆட்டங்களில் விளையாடி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 13 முதல் தர ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் இதற்கு முன்பு யுவராஜின் தந்தையான முன்னாள் இந்திய வீரர் யோக்ரா சிங்கிடம் பயிற்சி பெற்றார்.