கிரிக்கெட்

இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்பிகுர்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்கள் குவிப்பு

Published On 2024-08-24 11:53 GMT   |   Update On 2024-08-24 11:53 GMT
  • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
  • அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ராவல்பிண்டி:

பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 93 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. லிட்டன் தாஸ் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். 7வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிமுடன், மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பாக ஆடிஅய் முஷ்பிகுர் ரஹிம் சதமடித்து அசத்தினார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்தார்.

7-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்த நிலையில், முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டாகி இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மெஹிதி ஹசன் 77 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தானை விட 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News