இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு- முதல் ஓவரை மெய்டனாக வீசி மயங்க் யாதவ் அசத்தல்
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
- வங்கதேச அணி 19.5 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2 - 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றதை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
முதல் டி20 ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இப்போட்டியின் மூலம் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகினர்.
இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 19.5 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 27 ரன்களும் மெஹதி ஹசன் 35 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டும் மயங்க் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்க்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை மயங்க் யாதவ் கைப்பற்றியுள்ளார். வங்கதேச வீரர் மஹ்மதுல்லா விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.
சர்வதேச போட்டியில் அறிமுகமான மயங்க் யாதவ் முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். அஜித் அகர்கர் (2006), அர்ஷ்தீப் சிங்கிற்கு (2022) பிறகு சர்வதேச டி20 அறிமுகத்தில் முதல் ஓவரை மெய்டனாக வீசிய 3வது இந்திய பவுலராக மயங்க் யாதவ் மாறினார்