கிரிக்கெட் (Cricket)

146 ரன்னில் வங்கதேச அணி ஆல் அவுட்.. இந்தியாவுக்கு 95 ரன்கள் இலக்கு

Published On 2024-10-01 07:03 GMT   |   Update On 2024-10-01 07:03 GMT
  • வங்கதேச தரப்பில் ஷத்மான் அரை சதம் விளாசினார்.
  • இந்திய அணி தரப்பில் ஜடேஜா, அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 27-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன் எடுத்து இருந்தது.

மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. 2-வது நாள் போட்டியும், 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முழுமையாக நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 233 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மொமினுல் ஹக் சதம் (107)அடித்தார். பும்ரா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், அஸ்வின், ஆகாஷ்தீப் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து களமிறங்கிய இந்தியா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இது வங்காளதேச அணியின் ஸ்கோரைவிட 52 ரன் கூடுதலாகும்.

இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் அணி அஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 4-ம் நாள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்து இருந்தது.

ஷத்மான் இஸ்லாம் 7 ரன்னிலும், மொமினுல் ஹக் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 2 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஷாண்டோ - ஷத்மான் ஜோடி நிதானமாக விளையாடியது.

19 எடுத்த போது ஷானோ ஜடேஜா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்து வந்த லிட்டன் தாஸ் 1, ஷாகிப் அல் ஹசன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். சிறப்பாக விளையாடிய ஷத்மான் அரை சதம் அடித்தார்.

அரை சதம் விளாசிய கையோடு அவர் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மெஹிதி ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். ஒற்றை ஆளாக போராடிய ரஹிம் 37 ரன்னில் வெளியேறினார். இதனால் வங்கதேச அணி 2-வது இன்னிங்சில் 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா, அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags:    

Similar News