கிரிக்கெட் (Cricket)

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

Published On 2024-10-24 11:02 GMT   |   Update On 2024-10-24 11:02 GMT
  • முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது.
  • இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 307 ரன்களை குவித்தது.

வங்கதேசம் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 106 ரன்களில் ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களை குவித்தது. இதனால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி 307 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து 106 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் அந்த அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டொனி டி சொர்சி 41 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 20 ரன்களும், ஸ்டப்ஸ் 30 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களையும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

Similar News