கிரிக்கெட் (Cricket)
null

குறைந்த பந்துகளில் 300 விக்கெட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ரபாடா

Published On 2024-10-21 06:53 GMT   |   Update On 2024-10-21 07:58 GMT
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா ஆவார்.
  • வங்கதேசத்துக்கு எதிராக ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்ததுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



இந்நிலையில் இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டை ரபாடா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் டேல் ஸ்டெய்ன் (439) உள்ளார். அவரை தொடர்ந்து 2 முதல் 6 இடங்கள் முறையே ஷான் பொல்லாக் (421), மக்காயா ந்தினி (390), ஆலன் டொனால்ட் (330), மோர்னே மோர்கல் (309), ககிசோ ரபாடா (300) ஆகியோர் உள்ளனர்.

மேலும் மிகக் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையும் ரபாடா படைத்துள்ளார். அந்த வகையில் முதல் நான்கு இடங்கள் முறையே ரபாடா (11817 பந்துகள்), பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் (12602),

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் டேல் ஸ்டெய்ன் (12605), ஆலன் டொனால்ட் (13672) ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News