கிரிக்கெட் (Cricket)

பார்டர் கவாஸ்கர் டிராபி: ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் விலகல்

Published On 2024-10-14 05:30 GMT   |   Update On 2024-10-14 05:30 GMT
  • இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது.
  • காயத்தால் அவதிப்படும் கிரீன் 6 மாத காலம் கிரிக்கெட் விளையாட இயலாது.

மெல்போர்ன்:

இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 22-ந்தேதி பெர்த்தில் தொடங்கு கிறது. ஜனவரி 7-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளார்.

முதுகுபகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் 6 மாத காலம் கிரிக்கெட் விளையாட இயலாது.

கேமரூன் கிரீன் விலகுவது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அவர் 28 டெஸ்டில் விளையாடி 1377 ரன் எடுத்துள்ளார். 35 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 25 வயதான அவர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக 174 ரன் குவித்து இருந்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக 2 டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. தற்போது 'ஹாட் ரிக்' தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 4 தொடரிலும் இந்தியா வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News