மைதானத்தில் வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை.. அவசரமாக திருப்பி அனுப்பிய இந்தியா
- தன்னை இந்திய ரசிகர்கள் தாக்கியதாக தெரிவித்து பரபரப்பை கிளம்பினார்
- டைகர் ராபி வங்கதேசத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கியது. இந்த போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்ட டைகர் ராபி என்ற வங்கதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் தன்னை இந்திய ரசிகர்கள் தாக்கியதாக தெரிவித்து பரபரப்பை கிளம்பினார். மைதானத்தில் இருந்து டைகர் ராபி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் டைகர் ராபி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள டைகர் ராபி 12 நாள் மெடிக்கல் விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் எந்த சிகிச்சையும் எடுக்காமல் இந்தியா- வங்கதேசம் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளுக்கு புலி வேடம் போட்டு சென்று வந்துள்ளார். சென்னையில் நடந்த போட்டிக்கும் அவர் வந்ததாக கூறப்படுகிறது.
எனவே தற்போது டைகர் ராபி வங்கதேசத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் நாடுகடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், டைகர் ராபியின் 12 நாள் மெடிக்கல் வீசா இன்றுடன் [செப்டம்பர் 29] முடியவடைவதால் அவர் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.