பார்டர் கவாஸ்கர் கோப்பை: ஆட்டத்துக்கு நானும் வரலாமா?டேவிட் வார்னர்
- ஷெஃபீல்டு ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- தொலைபேசியை மட்டும் தான் எடுக்க வேண்டும்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ஓய்வு முடிவை திரும்ப பெற தயாராக இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் விளையாடி இருக்கும் டேவிட் வார்னர் 26 சதங்கள், 37 அரைசதங்களை விளாசியுள்ளார். இதில் மொத்தம் 8786 ரன்களை அடித்துள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தான் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பினால் ஷெஃபீல்டு ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய டேவிட் வார்னர், "நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். தொலைபேசியை மட்டும் தான் எடுக்க வேண்டும். உண்மையைச் சொல்வதானால், பிப்ரவரியில் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து என் நண்பர்கள் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாடியுள்ளனர்."
"எனவே உண்மையாகச் சொன்னால், இந்த தொடருக்கு நான் உண்மையிலேயே தேவைப்பட்டால், அடுத்த ஷீல்ட் போட்டியில் விளையாடி, தொடரில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். சரியான காரணங்களுக்காக நான் ஓய்வு பெற்றேன். அவர்களுக்கு யாரேனும் தேவைப்பட்டால் என் கையை உயர்த்துகிறேன். நான் அதிலிருந்து விலகி செல்லப் போவதில்லை," என்று கூறினார்.