கிரிக்கெட் (Cricket)

டேவிட் வார்னருக்கு விடிவுகாலம்.. இனி எந்த தடையும் இல்லை..!

Published On 2024-10-25 11:07 GMT   |   Update On 2024-10-25 11:07 GMT
  • தலைமை பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
  • பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.

டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தலைமை பதவி வகிப்பதற்கான தடை நீக்கப்பட்டு விட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு பால்-டாம்பரிங் (பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்துவது) குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து டேவிட் வார்னர் தலைமை பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக மூன்று பேர் அடங்கிய அமர்வு, தடை நீக்கப்படுவதற்கான அனைத்து விதிளையும் டேவிட் வார்னர் பூர்த்தி செய்துள்ளதால் தடை நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், வார்னர் மரியாதை மற்றும் வருத்தம் தெரிவித்ததாக அமர்வு தெரிவித்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் டேவிட் வார்னர் இனி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தலைமை வகிக்க முடியும். இதில் அவர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக செயல்படலாம்.

Tags:    

Similar News