டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அபார பந்துவீச்சு: கோவை 129 ரன்கள் சேர்த்தது
- டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய கோவை அணி 129 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை:
டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன.
மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுஜய் அதிரடியாக ஆடி 12 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ராம் அர்விந்த் 27 ரன்னும், அதிக் உர் ரகுமான் 25 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
திண்டுக்கல் சார்பில் சந்தீப் வாரியர், விக்னேஷ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.