கிரிக்கெட் (Cricket)

துலிப் கோப்பை: ஷ்ரேயாஸ் அணியை 164 ரன்னில் சுருட்டிய ருதுராஜ் அணி

Published On 2024-09-05 09:02 GMT   |   Update On 2024-09-05 09:02 GMT
  • இந்தியா டி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
  • டி அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் படேல் அரை சதம் விளாசினார்.

துலிப் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே 4 நாள்கள் கொண்ட ஆட்டத்தில் விளையாடுகின்றனர். வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. சி அணியின் கேப்டனாக ருதுராஜ்-ம் டி அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரும் மோதினர். இதில் டாஸ் வென்ற சி அணியின் கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி டி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வா டைட், யாஷ் தூபே களமிறங்கினர். இருவரும் முறையே 4 மற்றும் 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 9, தேவ்தத் படிக்கல் 0, ரிக்கி புய் 4, ஸ்ரீகர் பரத் 13, சரனேஷ் ஜெய்ன் 13, ஹர்சித் ரானா 0 என ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் கடுமையாக போராடிய அக்ஷர் படேல் அரை சதம் விளாசினார். கடைசியில் 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சி அணி தரப்பில் வைஷாக் 3 விக்கெட்டும் அனுஷ் காம்போஜ் ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

Tags:    

Similar News