துலீப் கோப்பை: கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட இஷான் கிஷன் சதமடித்து அசத்தல்
- பாபா இந்திரஜித் 78 ரன்களை அடித்தார்.
- இஷான் கிஷன் 111 ரன்களை அடித்தார்.
துலீப் கோப்பை தொடரின் 2 ஆம் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா சி அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ கடைசி நேரத்தில் அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர்.
இதில் கெய்க்வாட் 2-வது பந்திலேயே காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் கை கோர்த்த சாய் சுதர்சன் - ரஜத் படிதார் இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
இந்த ஜோடி முறையே 43 மற்றும் 40 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த இஷான் கிஷன் 111 ரன்களை விளாசினார். பாபா இந்திரஜித் நிதானமாக விளையாடி 78 ரன்களை அடித்தார். இன்றைய நாளில் போட்டி முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா சி அணி 357 ரன்களை அடித்துள்ளது.
இந்தியா பி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி மற்றும் ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதே போன்று இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டியும் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணிக்கு சாம்ஸ் முலானி 88 ரன்களையும், தனுஷ் கோடியன் 53 ரன்களையும் அடித்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 288 ரன்களை அடித்துள்ளது.