கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி - தொடரில் முன்னிலை

Published On 2024-08-25 05:41 GMT   |   Update On 2024-08-25 05:41 GMT
  • முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.
  • இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 358 ரன் குவித்தது.

122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்து இருந்தது. நேற்று 4 ஆம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 326 ரன் எடுத்தது. இதனால் இங்கிலாந்துக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை சார்பில் காமிந்து மெண்டீஸ் 113 ரன்னும், தினேஷ் சன்டிமால் 79 ரன்னும், மேத்யூஸ் 65 ரன்னும் எடுத்தனர். கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் தலா 3 விக்கெட்டுகளையும், அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

205 ரன்கள் எனும் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 57.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 29 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.

Tags:    

Similar News