கிரிக்கெட்
null

கவுதம் கம்பீர் கனவு அணியில் கங்குலி, ரோகித் மிஸ்சிங்

Published On 2024-09-02 06:28 GMT   |   Update On 2024-09-02 07:05 GMT
  • எம்.எஸ். டோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார்.
  • விராட் கோலிக்கு பேட்டிங் வரிசையில் 5-வது இடம் கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேனாக விளங்கியவர் கவுதம் கம்பீர். இவர் தற்போது இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

இவர் ஆல்-டைம் இந்தியா லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இதில் ரோகித் சர்மா, கங்குலி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்கள் மட்டுமல்ல பும்ராவுக்கும் இடம் கொடுக்கவில்லை.

அவருடன் (கம்பீர்) சேவாக் தொடக்க வீரராக இடம் பிடித்துள்ளார். 3-வது இடம் ராகுல் டிராவிட்டுக்கும், 4-வது இடம் சச்சின் தெண்டுல்கருக்கும் கொடுத்துள்ளார். 5-வது இடத்தை விராட் கோலிக்கு வழங்கியுள்ளார். யுவராஜ் சிங் 6வது இடத்தை பெற்றுள்ளார். கம்பீரின் அணியில் யுவராஜ் சிங் மட்டுமே ஆல்-ரவுண்டர் ஆவார். பந்து வீச்சில் கும்ப்ளே, அஸ்வின், பதான், ஜாகீர் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். எம்.எஸ். டோனியை விக்கெட் கீப்பராக சேர்த்துள்ளார்.

கவுதம் கம்பீரின் ஆல்-டைம் இந்தியா லெவன்:-

1. சேவாக், 2, கம்பீர், 3. ராகுல் டிராவிட், 4. சச்சின் தெண்டுல்கர், 5. விராட் கோலி, 6. யுவராஜ் சிங், 7. எம்.எஸ். டோனி (வி.கீப்பர்), 8. அனில் கும்ப்ளே, 9. அஸ்வின், 10. இர்பான் பதான், 11. ஜாகீர் கான்.

கவுதம் கம்பீர் 2003-ம் ஆண்டு வங்காளதேசம் அணிக்கெதிராக டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இநதிய அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 147 ஒருநாள், 58 டெஸ்ட், 37 டி20 போட்டிகளில் விளையாடி 10,324 ரன்கள் அடித்துள்ளார். 2007-ல் டி20 உலகக் கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றவர் ஆவார்.

Tags:    

Similar News