கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இந்திய அணியில் இணைந்த ஹர்சித் ரானா

Published On 2024-10-29 13:01 GMT   |   Update On 2024-10-29 13:01 GMT
  • டெல்லி அணிக்காக விளையாடும் ஹர்சித் ரானா அசாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • ஹர்சித் ரானா பேட்டிங்கில் 59 ரன்கள் குவித்தார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ரானா இணைந்துள்ளார்.

ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடும் ஹர்சித் ரானா அசாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் பேட்டிங்கில் 59 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அவர் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

இதேபோல தான் வாஷிங்டன் சுந்தர் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News