இக்கட்டான சூழ்நிலையில் டோனி சொன்னது உதவியது- ரிங்கு சிங்
- சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் பயிற்சி செய்கிறேன்.
- இது பற்றி நான் மஹி பாயிடம் நிறைய பேசியது உதவியது.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 10, அபிஷேக் சர்மா 15, கேப்டன் சூர்யகுமார் 8 ரன்களில் அவுட்டானார். அதனால் 41-3 என இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.
அப்போது ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்நிலையில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை விழும் போது தன்னம்பிக்கையுடன் விளையாடி அணியை மீட்டெடுக்க வேண்டும் என்று எம்எஸ் டோனி சொன்னது உதவியதாக ரிங்கு சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடினமான நேரங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டதே செயல் முறையாகும். இந்த இடத்தில் நீண்ட காலமாக விளையாடி வருவதால் அது எனக்கு இயற்கையாகவே வரக்கூடிய ஒன்றாகும். சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் பயிற்சி செய்கிறேன்.
இது பற்றி நான் மஹி பாயிடம் நிறைய பேசியது உதவியது. ஆரம்பத்திலேயே 3 - 4 விட்கெட்டுகள் விழும் போது நீங்கள் தன்னம்பிக்கையுடன் விளையாட வேண்டும். பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்த நிலையில் நிதிஷ் ரெட்டியும் நானும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தோம். முகமதுல்லா வீசிய நோபாலுக்கு பின் போட்டியின் வேகம் எங்கள் பக்கம் திரும்பியது. அந்தப் பந்துக்குப்பின் நித்திஷ் ரெட்டி தன்னம்பிக்கையை பெற்று அதிரடியாக விளையாடினார்.
என்று ரிங்கு சிங் கூறினார்.