கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. தேதி அறிவித்த ஐசிசி - எங்க நடக்குது தெரியுமா?

Published On 2024-09-03 10:30 GMT   |   Update On 2024-09-03 10:30 GMT
  • அந்த மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
  • நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முறையே சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தேதி மற்றும் நடைபெறும் இடம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்-ஆஃப்ட் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூன் 16 ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

 


முன்னதாக 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சவுதாம்ப்டன் மைதானத்திலும், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டி ஓவல் மைதானத்திலும் நடைபெற்றன. இவற்றில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முறையே சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.

இரு பிரிவுகளில் முதல் இடத்தை பிடிக்கும் இரு அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. தற்போது இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்த இரு அணிகளைத் தொடர்ந்து நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

Tags:    

Similar News