கிரிக்கெட்
null

இந்திய அணியுடன் இணைந்த துணை பயிற்சியாளர்கள்

Published On 2024-09-13 10:30 GMT   |   Update On 2024-09-13 10:43 GMT
  • தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
  • முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று சென்னை வந்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 27-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று சென்னை வந்துள்ளது.

இந்நிலையில் இன்று இந்திய அணி வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பயிற்சியின் போது இந்திய அணியுடன் புதிய பந்து வீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான அபிஷேக் நாயரும் இணைந்துள்ளார். இருவரும் முதல் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News