கிரிக்கெட்

கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து ரகானே விலகல்

Published On 2024-09-17 07:43 GMT   |   Update On 2024-09-17 07:43 GMT
  • கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக ரகானே விளையாடி வந்தார்.
  • போட்டிக்கு நடுவே ரகானேவை கவுண்டி மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரகானே. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவந்த இவர், சமீப கலமாக மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக அவர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.

அந்த அணி அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய லிசெஸ்டர்ஷையர் அணியானது, அரையிறுதியில் சொமர்செட் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது.

இருப்பினும் ஒருநாள் தொடருக்கு பிறகு கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக ரகானே விளையாடி வந்தார். இத்தொடரில் லிசெஸ்டர்ஷைர் அணியானது விளையாடிய 12 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி மற்றும் 9 போட்டிகளை டிராவில் முடித்து புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனையடுத்து நடப்பு சீசனின் கடைசி இரண்டு போட்டிகளில் லிசெஸ்டர்ஷைர் அணியானது விளையாடவுள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு சீசன் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ரகானே விலகியுள்ளதாக லிசெஸ்டர்ஷைர் அணி அறிவித்துள்ளது.

அதன்படி போட்டிக்கு நடுவே காயத்தால் அசௌகரியமாக உணர்ந்த ரகானேவை கவுண்டி மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவிக்கு பிறகு அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டார்.

Tags:    

Similar News