கிரிக்கெட் (Cricket)

சதத்தை தவறவிட்ட மைக்கேல் லூயிஸ்: முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் 250/5

Published On 2024-11-22 21:31 GMT   |   Update On 2024-11-22 21:31 GMT
  • டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
  • முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளில் 250 ரன்கள் எடுத்தது.

ஆன்டிகுவா:

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடரும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும் நடைபெற உள்ளன.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கீசி கார்டி டக் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் லூயிஸ் பொறுப்புடன் ஆடினார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த மைக்கேல் லூயிஸ், கவெம் ஹோட்ஜ் ஜோடி 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஹோட்ஜ் 25 ரன்னில் வெளியேறினார்.

4வது விக்கெட்டுக்கு மைக்கேல் லூயிஸ் உடன் அலிக் அத்தான்ஸ் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடி ரன்களை சேர்த்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல் லூயிஸ் 97 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 140 ரன்களை எடுத்தது. கவெம் ஹோட்ஜ் 90 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்துள்ளது.

Tags:    

Similar News