3வது டி20 போட்டி: 11 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
- முதலில் ஆடிய இந்தியா திலக் வர்மா சதத்தால் 219 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை எடுத்தது.
செஞ்சூரியன்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் விரைவில் விக்கெட்களை இழந்தனர்.
ரிகலடன் 20 ரன்னும், ஹென்ரிக்ஸ் 21 ரன்னும், மார்கிரம் 29 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும், டேவிட் மில்லர் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கிளாசன் 41 ரன் எடுத்து வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய மார்கோ ஜேன்சன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 19வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 24 ரன்களை குவித்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.