டி20 கிரிக்கெட்டில் 2 ஆவது அதிகபட்ச ஸ்கோர்.. 297 ரன்கள் குவித்து இந்திய அணி சாதனை
- சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார்.
- அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். 4 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - சூர்யகுமார் வங்கதேச பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்த ஜோடி அதிரடி காட்டியது.
அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர் 111 ரன்கள் எடுத்து சாம்சன் அவுட்டானார். இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களத்தில் இருந்த ரியான் பராக் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி வங்கதேச பந்துவீச்சை சிதறடித்து சிக்சர் மழை பொழிந்தனர். 13 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ரியான் பராக் ஆட்டமிழந்தார். 18 பந்துகளில் 47 ரன்கள் குவித்து பாண்ட்யா ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது இந்திய அணி. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது 2 ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் இடத்தில 314 ரன்கள் அடித்து நேபாளம் அணி உள்ளது.