வங்கதேசதுக்கு எதிராக முதல் முறை.. சாதனை படைத்த இந்தியா
- 2-வது டி20 போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
- இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி சனிக்கிழமை நடக்கிறது.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக 200 ரன்கள் அடித்துள்ளது. மேலும் அந்த அணிக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக 196 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோர்.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2024 டி20 உலகக் கோப்பையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய பெரிய வெற்றியாகும்.