null
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை
- பெங்களூரு, புனே டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
- இந்த இரண்டு போட்டிகளிலும் கேன் வில்லியம்சன் பங்கேற்காத நிலையில், 3-வது போட்டியிலும் விளையாடவில்லை.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும்போது நியூசிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் காயம் அடைந்தார்.
காயம் முழுமையாக குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் களம் இறங்கவில்லை. 2-வது டெஸ்டில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டிலும் அவர் களம் இறங்கவில்லை.
மும்பை வான்கடே மைதானத்தில் வருகிற 1-ந்தேதி 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் முழுவதும் கேன் வில்லியம்சன் இடம் பெறவில்லை.
பெங்களூரு, புனே டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளதால் மும்பை வான்கடே போட்டியின் முடிவு அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
அதேவேளையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.