கிரிக்கெட் (Cricket)
null

சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்து ஜோ ரூட் சாதனை

Published On 2024-10-10 09:27 GMT   |   Update On 2024-10-10 09:31 GMT
  • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.
  • இப்போட்டியில் ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டியில் இரட்டை சத்தம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஜோ ரூட் கடந்துள்ளார்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

மேலும், இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டை சதம் விளாசிய சச்சினின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

Tags:    

Similar News