கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலியா

Published On 2024-11-07 04:29 GMT   |   Update On 2024-11-07 04:29 GMT
  • ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் 30-வது வீரராக இங்கிலிஸ் களமிறங்க உள்ளார்.
  • டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் 14-வது கேப்டனாக இங்கிலிஸ் களமிறங்க உள்ளார்.

பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா போராடி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும் 3-வது ஒருநாள் மற்றும் டி20 தொடரில் முழுவதும் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக ஜோஸ் இங்கிலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் 30-வது வீரராகவும், டி20 வடிவத்தில் 14-வது வீரராகவும் இங்கிலிஸ் திகழ்வார்.

ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களான கம்மின்ஸ், ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்னஸ் லாபுஷக்னே ஆகியோர் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளதால் அதற்கு தயாராகும் வகையில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

Similar News